இலங்கையிலுள்ள அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் நிதியுதவி – இலங்கை கால்பந்து சம்மேளனம் !
Saturday, May 9th, 2020சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் கொவிட் 19 வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியானது அனைத்து கால்பந்து கழகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்ட பணிகள் மே 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, இரண்டாவது கட்ட பணிகள் ஜூன் மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தொடரை வென்றது அவுஸ்திரேலியா!
மேசைப்பந்தாட்டத் தொடரில் யாழ்.மத்தி கிண்ணம் வென்றது!
புதிய உலக சாதனையுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா!
|
|