இலங்கையின் 14 வது டெஸ்ட் அணித்தலைவராக ரங்கன ஹேரத்!

Wednesday, October 26th, 2016
சிம்பாப்வே அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக 38 வயதான ஹேரத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரின்போது உபாதையடைந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் அணியின் தலைவராக ஏற்கனவே சிம்பாப்வே தொடருக்கு அறிவிக்கப்பட்டாலும், அவரால் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்ற அடிப்படையில் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாகவே இப்போது ஹேரத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உதவித்தலைவராக செயல்பட்டுவந்த தினேஷ் சந்திமாலுக்கு உள்ளூர் தொடரின்போது பெருவிரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரும் சிம்பாப்வே தொடரில் விளையாடவில்லை.

இந்தநிலையில்தான் ஹேரத் இலங்கை அணியின் 14 வது டெஸ்ட் அணித்தலைவர் எனும் பெருமையை பெறுகின்றார். எதிர்வரும் 29- ம் திகதி சிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது.

1999-ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான ஹேரத், 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 332 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

இலங்கையின் முன்னணி பந்து வீச்சாளர்களாகத் திகழ்ந்த முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ் ஆகியோருக்கே கிடைக்காத கௌரவம் ஹேரத்துக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அணித்தலைவர் மெத்திவ்ஸுக்கு பதிலாக உப்புல் தரங்க நியமிக்கப்படுவார் என தேர்வுக்குழுத்தலைலர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.இலங்கை அணி மூத்த வீரர்கள் இல்லாமல் சிம்பாப்வே செல்வதுடன்  ரங்கன ஹேரத் சிம்பாப்வே மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வில்லை என்பம் குறிப்பிடத்தக்கது.

625.500.560.350.160.300.053.800.900.160.90

Related posts: