இலங்கையின் முதல் வாய்ப்பு பறிபோனது!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிகோ ரஹிம் தனது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்.
பெண்களுக்கான 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் இரண்டாவது சுற்றில் 4 இடத்தை பெற்ற இவர் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளார். இவர் குறித்த பட்டியலில் 28 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
100 மீற்றர் தூரத்தை 1.04.21 என்ற நேரக்கணக்கில் நிறைவுசெய்து 4 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.இதேவேளை இவர் குறிப்பிட்ட 100 மீற்றர் தூரத்தை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 1.03.78 என்ற நேரக்கணக்கில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
100 மில்லியன் அமெரிக்க டொலர்: பெடரர் சாதனை!
தோல்வியின் பயமே தோல்விக்கு காரணம் - மஹேல!
குசால் பெரேராவின் போராட்டம் வீணானது: 45 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வி!
|
|