இலங்கையின் தோல்வி குறித்து ரணதுங்க ஆவேசம்!

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் வொயிட் வாஷ் ஆனதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் அணித்தலைவர் ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.
இந்திய அணி, இலங்கையுடன் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோல்வியடைந்தது.
முதல் டெஸ்டில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்று இந்தியா தொடரை கைப்பற்றி அசத்தியது.
மேலும் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது இதுவே முதல் முறை.
இந்நிலையில் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தோல்வியடைந்ததற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ரணதுங்கா கடுமையாக சாடியுள்ளார்.இதுதொடர்பாக பேசிய அவர், இலங்கை கிரிக்கெட் அணி படுமோசமான நிலையை நோக்கிச் செல்கிறது.
இந்த தோல்விக்கு நீங்கள் எந்த ஒரு வீரரையும் குறைசொல்லக் கூடாது, இதற்கு முழு முதல் காரணம் அணி நிர்வாகத்தினர் தான்.இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாக தலைவர் திலங்கா சுமதிபாலாவிடம், இலங்கை அடைந்த தோல்வி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண்டும்.எங்களிடம் தகுதியான வீரர்களை தெரிவு செய்யும் சிறப்பான தேர்வாளர்கள் இல்லை என கடுமையாக சாடியுள்ளார்.
Related posts:
|
|