இலங்கையின் தேசிய படகு ஓட்டப்போட்டி!
Wednesday, April 18th, 2018
இலங்கை படகு ஓட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய படகு ஓட்டப்போட்டி இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ராஜகிரிய தியவன்னாவ அருகாமையிலுள்ள தியவன்னா படகு ஓட்ட விளையாட்டு மத்திய நிலையத்தை கேந்திரமாக கொண்டுஆரம்பமாவுள்ளது.
குறித்த போட்டி 20 ஆம் திகதியிலிருந்து 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் ஒவ்வொரு வருட இறுதியிலும் போட்டி நடாத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இந்த போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதிற்குட்பட்ட, 18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பகிரங்க கனிஷ்ட போட்டிகளும்நடைபெறவுள்ளன.
Related posts:
ஹேரத் தரவரிசையில் முன்னேற்றம்!
மேத்யூஸ் விலகலால் வளர்ச்சி ஏற்படாது: கவலை வெளியிட்ட ஜயசூரிய!
இந்திய டெஸ்ட் அணியில் ஆறாம் நிலை யாருக்கு?
|
|