இலங்கையின் சுதந்திர தின கிரிக்கெற் போட்டி நாளை ஆரம்பம்!

Monday, March 5th, 2018

இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முக்கோண 20க்கு 20 கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய மற்றும் பங்களாதேஸ் அணி வீரர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்தப் போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்கின்றன.

இதன் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்தப் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகின்றார். இந்நிலையில்

இந்திய அணியில் முக்கிய வீரர்களான அணித்தலைவர் விராட் கோலி, விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி, சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா,புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அணியில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் பங்கு கொள்ள மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: