இலங்கையின் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கு இந்தியாவுக்கு அழைப்பு!

Sunday, January 22nd, 2017

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையிலே “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது.

இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும்.

இத்தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

SLC

Related posts: