இலங்கையின் எதிர்காலம் குசால் மெண்டிஸ்- மத்தியூஸ்!

Thursday, August 25th, 2016

தற்போது குசால் மெண்டிஸின் துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு நம்பிக்கை தந்துள்ளதாக அணித்தலைவர்அ மெத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

குசால் மெண்டிஸின் துடுப்பாட்டம் எமது வெற்றிக்கு முக்கிய காரணம். ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில்  முதல் இரண்டு விக்கட்டுகளும் விரைவாக வீழ்த்தப்பட்டன. எனினும் குசால் மெண்டிஸ் மற்றும் சந்திமால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குசால் மெண்டிஸ் ஆஸி அணிக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்று அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்தொடர்ந்தும் குசால் மெண்டிஸின் துடுப்பாட்டம் சிறப்பாக அமையுமாயின், நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

இந்நிலையில் குசால் மெண்டிஸ் எதிர்காலத்தில் சிறந்த வீரராக வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதுமாத்திரமின்றி குசால் மெண்டிஸ் “இலங்கை தேசிய அணியின் எதிர்காலம்” எனவும் மெத்தியுஸ் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts: