இலங்கையின் உலக கிண்ண கனவு பறிபோனதா?

Sunday, September 3rd, 2017

2019 இல் இடம்பெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் தொடரில் தன்னிச்சையாக தெரிவாவது , இந்தியாவுடனான மோசமான ஆட்டத்தால் இலங்கை அணியிடமிருந்து  கைநழுவி உள்ளது .

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் 5ஒருநாள் போட்டிகளில்   2 மோதல்களிலாவது வென்றால் , தேர்வு நிச்சயமாகலாம் என்ற நிலையில் , நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் , இலங்கை மண் கவ்வி உள்ளது .தன்னிச்சை தெரிவுக்கான இறுதித் திகதி செப்டம்பர்30ஆகும் . எனவே எட்டாவது நாடாக தெரிவாகும் நாடு இனி வரும் காலத்தில் மேற்கிந்திய அணியின் விளையாட்டைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் .

மேற்கிந்திய அணி  இனி விளையாடப் போகும் ஆறு ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் தோற்றால் , இவர்களுக்கான வாய்ப்பு பறிபோய்விடும் .  ஆனால் இவர்கள் தெரிவாவது மிகச் சிரமம் என்பதால் ,எட்டாவது தெரிவுக்கு  இலங்கைக்கான வாய்ப்பே அதிகமாக இருக்கின்றது மேற்கிந்திய அணி இங்கிலாந்துடன் 5ஒரு நாள் ஆட்டப்போட்டிகளும் , அயர்லாந்துடன் ஒரு போட்டியும் விளையாடவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் ,புள்ளி அடிப்படையில் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளின் தரவரிசை கீழ்காணும் விதத்தில் அமைந்துள்ளது .

  1. தென் ஆபிரிக்கா அவுஸ்திரேலியா 3. இந்தியா 4. இங்கிலாந்து 5. நியூசிலாந்து 6. பாகிஸ்தான் 7. பங்களாதேஷ்8.  இலங்கை 9.மேற்கிந்திய தீவுகள் 10. ஆபுகானிஸ்தான் 11. சிம்பாவே 12.அயர்லாந்து

Related posts: