இலங்கையணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் – சங்கக்கார!

இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்சிய அடையும்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்களிப்பு செய்வார் என குமார்சங்கக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
”21 வயதே உடைய குசல் மெண்டிஸ் சாதுரியமாகவும் பந்து விழும் இடத்தை சரியாகக் கணித்தும் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
அவரைக் கொண்டு கிரிக்கெட் அரங்கில் நிறைய எதிர்பார்க்கலாம். வருடங்கள் செல்ல செல்ல அவர் சிறப்பு வாய்ந்த ஒருவராக உயர்வார்” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்பதாக நடைபெற்ற இரண்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் அரைச் சதங்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனை அடுத்து குமார் சங்கக்காரவிடம் இலங்கை அணி பற்றி கிரிக் இன்ஃபோ வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சரே பிராந்திய அணிக்காக முதலாம் பிரிவு கிரிக்கெட் வல்லவர் போட்டிகளில் குமரர் சங்கக்கார விளையாடி வருகின்றார்.தொடர்ந்து கருத்து வெளியிட்ட குமார் சங்கக்கார, ”ஏஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் விளையாடுவதுடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவர் பெரும் பங்காற்றுவார் எனக் கருதுகின்றேன்.
தினேஷ் சந்திமால், அணியில் இடம்பெறுவாராக இருந்தால் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு இந்தத் தொடர் சிறப்பு முக்கியமானதாகும். அவர்கள் போன்றவர்கள் அணியில் இடம்பெறுவதற்கு தங்களது திறமையை நிரூபிக்க இது சிறந்த சந்தர்ப்பமாகும்.
இலங்கை அணிக்கு அவர்கள் இருவரையும் மிகச் சிறந்த வீரர்களாகவே நான் பார்க்கின்றேன். இருவருமே முதிர்ச்சியும் அனுபவமும் மிக்க வீரர்கள். இன்னும் பல வருடங்களுக்கு துடுப்பாட்ட வரிசையில் முக்கிய பங்காற்றக்கூடியவர்கள்” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.
”இளமைமிக்க நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்செய டி சில்வா ஆகியோரும் குழாமில இடம்பெறுகின்றனர். தனஞ்செய டி சில்வா ஒருகாலத்தில் விக்கெட் காப்பாளராகவும் இப்போது சிறந்த துடுப்பாட்டக்காரராகவும் பிரகாசித்து வருகின்றார்.
அத்துடன் திறமையான ஓவ் ஸ்பின் பந்துவீச்சாளருமாவார். எனினும் இயல்பு, நுட்பத்திறன், உளப்பாங்கு ஆகியன கடும் சோதனையாகத்தான் இருக்கும். அவர்களுக்கு இது ஆழமான பாடமாக அமையவுள்ளது. ஆனால் விரைவாக சகலதையும் கற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன்” என்றார்.
”குழாமில் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீரவும் இடம்பெறுகின்றார். அவர் ஓர் உத்வேகம் மிக்க வீரர். அவர் 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அவர் அணிக்கு பாரிய பங்களிப்பு செய்வார் என நம்புகின்றேன். கட்டுப்பாட்டுடனும் படுவேகமாகவும் பந்து வீசக் கூடியவர்.
அவரும் எதிரணிக்கு பலத்த சவாலாகத் திகழ்வார். எனவே இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டில் பிரகாசத்தை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக் கின்றது” என குமார் சங்கக்கார மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|