இலங்கைக்கு வரவுள்ளது FIFA கிண்ணம்!

Saturday, December 23rd, 2017

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால் பந்து போட்டியின் கிண்ணத்தை முதலில் இலங்கையின் விளையாட்டு ரசிகர்கள் பார்வையிட சந்தர்ப்பம்கிடைத்துள்ளது.

போட்டிக்கு முன்பு 54 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ள குறித்த கிண்ணம் முதலாவதாக இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

குறித்த கிண்ணம் ஜனவரி மாதம் 23ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பெற்றுக் கொள்ளப்பட்டு 24ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டுமண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விஷேட கூட்டம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: