இலங்கைக்கு தங்கப் பதக்கம்!

Friday, July 8th, 2016

தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் திலிப் ருவன் குமார இன்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.

தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன் ஷிப் போட்டியில் தற்போது மூன்று தங்கப்பதக்கங்களை இலங்கை தனதாக்கியுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தங்க பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கத்தை இலங்கை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது

Related posts: