இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி!
Friday, September 21st, 2018இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா 46 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனுஜா பட்டீல் தலா 36 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், மந்தனா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளும், ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Related posts:
குசலுக்கு பதிலாக இங்கிலாந்து செல்லும் தனஞ்சய!
கிரிக்கெட் எதிர்காலம் குறித்து ரங்கன ஹேரத்தின் தீர்மானம்!
தென்னாபிரிக்கவை வென்றது நியூசிலாந்து!
|
|