இலங்கைக்கு எதிரான தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?

Tuesday, December 24th, 2019


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் ரோகித் சர்மா. அவர் இந்த ஆண்டு 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதற்கிடையே அவர் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஓய்வு அளிக்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் 3 இரவு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி 5 ஆம் திகதி கவுகாத்தியில் நடக்கிறது.

இந்த தொடர் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் ரோகித் சர்மா தனக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து ஒய்வு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த ஆண்டு ரோகித் சர்மா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடினார்.

சில தொடரில் தலைவர் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டபோது பொறுப்பு தலைவர் பதவியையும் ஏற்று அணியை வழி நடத்தினார். இதனால் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

இதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் துடுப்பாட்ட வீரர் சூரிய குமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி என்று தெரிகிறது. அப்படி அவருக்கு வாய்ப்பு அளித்தால் கேதர் ஜாதவின் இடம் கேள்விக் குறியாகி விடும்.

Related posts: