இலங்கைக்கு எதிரான டெஸ்டில் லாதம் இரட்டை சதம்!  

Monday, December 17th, 2018

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லாதம், இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அபாரமாக ஆடி இரட்டை சதம் விளாசியுள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 578 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

தொடக்க வீரர் டாம் லாதம் நேற்றைய ஆட்டநேர முடிவில் 121 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் 3வது நாளான இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த அவர், தான் எதிர்கொண்ட பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார்.

அபாரமாக விளையாடிய லாதம், டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். சதத்திற்கு பிறகு சிறப்பாக விளையாடி 264 ஓட்டங்கள் எடுத்து நாட்-அவுட் ஆக திகழ்ந்தார். இதில் ஒரு சிக்சர், 21 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம், ஓர் இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த 6வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை டாம் லாதம் பெற்றுள்ளார்.

Related posts: