இலங்கைக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம்!

Monday, February 5th, 2018

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற 8ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஹஜந்திகா அபேரத்ன தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இலங்கை ஆசிய உள்ளகமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இலங்கை 3ஆவது தடவையாக இந்தப் போட்டியில்பங்கேற்றுள்ளது.   இம்முறை இலங்கை ஒரு தங்கப்பதக்கத்தையும் 3 வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

மேலும் நீளம் பாய்தல் போட்டியில் ஜனக பிரசாத் விமலசிறியும், 800 மீற்றர்ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சியும், 400 மீற்றர் ஓட்டத்தில் உபமாலிகா ரத்னகுமாரியும்வெண்கலப்பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: