இறுதி போட்டிக்கு முன்னேறியது அவுஸ்திரேலியா!

Wednesday, June 22nd, 2016

முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடரி்ல் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வீழ்த்தியது.

நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பச்சு வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் எடுத்தது.

மேற்கிந்திய அணியில் அதிகபட்சமாக மார்லன் சாமுவேல்ஸ் 125, தினேஷ் ராம்தீன் 91 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3, பால்க்னர், போலண்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

283 ஓட்டங்கள் எடுத்தால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணியில் மார்ஷ் 79, மேக்ஸ்வெல் 46 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அவுஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகனாக 125 ஓட்டங்கள் எடுத்த மார்லன் சாமுவேல்ஸ் தெரிவுசெய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Related posts: