இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்..!

Tuesday, December 15th, 2020

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஜப்ஃனா ஸ்டேலியன் அணி 37 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் அம்பாந்தோட்டையில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள வைகிங் அணி ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

166 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங் அணி 19.1 ஓவர்களில் 10 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

இதற்கமைய நாளை மறு தினம் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடன் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: