இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா பெண்கள் அணி!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்து புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் உள்ள அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
அதன் படி இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே முதல் அரையிறுதி போட்டி நடைபெறுவதாக இருந்தது.
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற இருந்த அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதால் அரையிறுதி போட்டி கைவிடப்பட்டதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் பட்டியலில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
Related posts:
நியூசிலாந்துத் தொடர் இரத்தாகாது?
நியூஸிலாந்தை வெள்ளையடித்தது இந்தியா!
அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!
|
|