இறுதி ஏலப்பட்டியலில் 351 வீரர்கள்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான இறுதி ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என தேரிவிக்கப்படுகின்றது.
இந்த தொடர் எதிர்வரும ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 20 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக 799 வீரர்கள் தம்மை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இறுதி ஏலப்பட்டியலில் 351 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 122 வெளிநாட்டு வீரர்களும் 24 இந்திய வீரர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் ஷர்மா, மார்சன், பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், மத்யூஸ், கம்மின்ஸ், மிட்செல் ஜோன்சன் போன்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக 2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|