இறுதி இலக்குகளை தகர்க்க தடுமாறிய இலங்கை!
Saturday, March 18th, 2017வங்கதேச அணியின் கடைசி விக்கெட்களை எடுப்பதற்கு இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றார்கள்.இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கொழும்பில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி தற்போது 3 ஆவது நாள் ஆட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது தனது முதல் இன்னிங்க்சை ஆரம்பித்த வங்கதேச அணி ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்தாலும் தற்போது இறுதி துடுப்பாட்டவீரர்கள் அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
120 ஓவர்கள் நிறைவுபெற்றிருக்கும் நிலையில் வங்கதேச அணி 439 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை மாத்திரமே இழந்துள்ளது.
7 ஆவது விக்கெட்டிற்காக இணைந்த சாகிப் மற்றும் ஹூசைன் 131 ஓட்டங்களை இனிப்பட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கியினை அதிகரித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சாகிப் 116 ஓட்டங்களை அதிகமாக பெற்றார், மேலும் இலங்கை அணி சார்பில் சந்தகன் 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
Related posts:
|
|