இறுதி அஞ்சலி செலுத்திய இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் !

Monday, June 5th, 2017

ஐசிசி சாம்பியன்ஸ் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை அணி  இலண்டனில் தங்கியுள்ளனது.

இந்நிலையில் இலண்டனில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இலங்கை அணியின் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பிற்கு சிக்கல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணி மற்றும் ஏனைய அணிகளுக்கு எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சாம்பியனஸ் கிண்ண போட்டியின் நான்காவது போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இதன்போது இலண்டன் தாக்குதலுக்கு வருத்தம் வெளியிடப்பட்டது.

அத்துடன் உயிரிழந்தவர்களுக்காக அணியின் வீரர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். இலண்டனில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக ஏழு பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

Related posts: