இறுதிப் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும்!

Friday, September 2nd, 2016

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு உபுல் தரங்க அழைக்கப்பட்டுள்ளார்.

உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியுவ்ஸூக்கு பதிலாகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.மேலும் திஸர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகேனுக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல மற்றும் தசுன் சானக அணியில் சேர்த்து கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இறுதி போட்டி நாளை மறுதினம் பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது இதில் இலங்கை அணியின் தலைவராக அணியின் உபதலைவர் தினேஸ் சந்திமால் செயற்படவுள்ளார்.எனினும் இந்த தொடரை ஏற்கனவே அவுஸ்திரேலியா அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

upultharangka.

Related posts: