இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு நன்றி தெரிவித்த ராகுல் டிராவிட்!

Wednesday, March 15th, 2023

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியா பிரவேசிப்பதற்கு உதவிய நியூசிலாந்துக்கு இந்திய கிரிக்கட் அணியின் முகாமைத்துவம் நன்றியை தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் இலங்கையை வீழ்த்தியதற்கு இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நியூஷிலாந்து அணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப்போட்டியில் நியூசிலாந்து இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வருவதற்கான இலங்கையின் நம்பிக்கையை தகர்த்தது.

இலங்கை அணி இந்தப்போட்டியில் வெல்லாது என்று தாம் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிந்ததாக ராகுல் ட்ராவிட் குறிப்பிட்டார்.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் என்பது இரண்டு வருட நீண்ட நிகழ்வாகும். அனைத்து அணிகளும் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றன.

எனவே மற்ற அணிகளை சார்ந்து இருப்பது இயற்கையானது. அணிகள் சிறப்பாக விளையாடவேண்டும்.

எனினும் இது போன்ற போட்டிகளில் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலை உள்ளது என்று ராகுல் ட்ராவிட் குறிப்பிட்டார்.

Related posts: