இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா!

Friday, July 12th, 2019

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் தரநிலை பெறாத செக்குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் பார்போரா ஸ்ட்ரைகோவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்

Related posts: