இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை !

Saturday, May 11th, 2019

2 ஆவது தகுதி சுற்றுப்போட்டியில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோதும் 2வது தகுதி சுற்று போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை குவித்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷாப் பந்த் 38 ரன்களை குவித்திருந்தார். சென்னை அணியில் தீபக் சஹார், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டுபிளிசஸ் 50(39) – வாட்சன் 50(32) ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

அதன்பிறகு களமிறங்கிய ரெய்னா 11 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராயுடு மற்றும் தோனி ஆட்டத்தை முடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தோனி 9 ரன்னில் வெளியேறினார்.

19-வது ஓவரில் 151 ரன்களை எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் வரும் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.

Related posts: