இறுதிபோட்டிக்குள் நுழைந்த ரோஜர் பெடரர்!

Sunday, July 16th, 2017

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்இ 7 முறை சம்பியனும்இ உலகின் 3ஆம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்குள் 11வது முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில்இ சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர்இ செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆக்ரேஷமான விளையாடிய பெடரர் 7-6 7-6 6-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் பெடரர்இ குரோஷியாவின் மரின் சிலிச்சுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்..

Related posts: