இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்கு 180!

Friday, January 11th, 2019

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை இதுபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணிக்கு 180 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் டக் பிரேஸ்வெல் 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், கசுன் ராஜித்த மூன்று விக்கட்டுக்களையும், அணித்தலைவர் லசித் மாலிங்க 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.