இரண்டாவது போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு.

Thursday, August 3rd, 2017

சுற்றுலா இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஸ் சந்திமால் , லக்ஷான் சந்தகென் மற்றும் நீண்ட நாட்களுக்கு பின்னர் லஹிரு திரிமான்ன குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.லஹிரு திரிமான்ன 13 மாதங்களுக்கு பின்னர் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர் உபாதைக்கு உள்ளாகியுள்ள அசேல குணரட்னவிற்கு பதிலாக குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அணித்தலைவர் தினேஸ் சந்திமால் அன்ஜலோ மத்திவ்ஸ் உபுல் தரங்க திமுத் கருணாரட்ன நிரோசன் திக்வெல்ல குசல் மெந்திஸ் தனஞ்சய த சில்வாதனுஷ்க குணதிலக  லஹிரு குமார விஷ்வ பிரனாந்து மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் டெஸ்ட் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.ரங்கன ஹேரத் தில்ருவன் பெரேரா  மலிந்த புஸ்ப குமார லக்ஷான் சந்தகென் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் அணியின் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts: