இரண்டாவது டெஸ்ட் போட்டி: முரளி விஜய்க்கு பதில் ராகுல்!

Saturday, July 30th, 2016

 

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா,மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.மேற்கிந்திய தீவு அணியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளரான அல்சார் ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் முதல் டெஸ்ட் போட்டியில் கப்ரில் வீசிய பந்து அவரது கட்டை விரலில் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இரண்டாவது டெஸ் போட்டியிலிருந்து முரளிவிஜய் விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லொகேஷ் ராகுல் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிற்து.மேலும் முரளி விஜய் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 7 ஓட்டங்கள் மட்டும் தான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Related posts: