இரண்டாவது டெஸ்ட்: இலங்கை அணி தடுமாற்றம்!

sl_ind_3rd Saturday, March 18th, 2017

வங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தடுமாற்றத்துடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிருகின்றது.

இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிவருகின்றது.

பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 05 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தனது 17 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசன் டெஸ்ட் அரங்கில் 04 ஆவது சதத்தை எட்டினார்.அறிமுக வீரரான மொசடெக் ஹூசைன் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 467 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அணித்தலைவர் ரங்கன ஹேரத் மற்றும் லக்ஷான் சந்தகென் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் இலங்கையை விட 129 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணி முன்னிலை பெற்றது.இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 338 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, திமுத் கருணாரத்தின மற்றும் உபுல் தரங்க ஜோடி நிதானமான ஆரம்பத்தினை வழங்கியது.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…