இரண்டாவது டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 26 ஓட்டங்கள்!

Saturday, March 18th, 2023

சுற்றுலா இலங்கை அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுபெற்றுள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில், 4 விக்கெட்டுக்களை இழந்து 580 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. கேன் வில்லியம்ஸன் அதிகபட்சமாக 215 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: