இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி – தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

Saturday, March 23rd, 2019

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக இசுரு உதான 84 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: