இரண்டாவது இனிங்ஸ்: தடுமாறுகிறது இலங்கை அணி!

Monday, October 9th, 2017

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவு வரையில் 5 விக்கட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இலங்கை அணி தமது இரண்டாவது இனிங்சில் 5 விக்கட்டுக்கள் கைவசம் உள்ளநிலையில், 254 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.இந்த போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இனங்சிற்காக 482 ஓட்டங்களையும், பாகிஸ்தான் அணி தமது முதலவாது இனிங்சிற்காக 262 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: