இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் !

Monday, January 8th, 2018

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 6, 000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராக மேற்கிந்தியத்தீவுகளின் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்- உடன் (Sir Garfield Sobers) அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பதிவாகியுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் 83 ஓட்டங்களைப் பெற்ற போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

Sir Garfield Sobers-ஸூம் ஸ்டீவ் ஸ்மித்தும் 111 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் கிரிக்கெட்டின் பிதாமகர் என போற்றப்படும் மறைந்த சேர் டொன் பிரட்மன் முதலிடம் வகிக்கின்றார். அவர் 66 இன்னிங்ஸ்களில் 6,000 ஓட்டங்களை எட்டியுள்ளார்.

Related posts: