இரண்டவது இனிங்ஸில் நிதானமாக ஆடும் இங்கிலாந்து!

Saturday, August 6th, 2016

எட்ஜ்பஸ்டனில் ஆரம்பமாகியுள்ள இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இங்கிலாந்து அணி, எதுவித விக்கெட்டுகளையும் இழக்காமல் 120 ஓட்டங்களைப் பெற்று, பாகிஸ்தான் அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 17 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது களத்தில், அலிஸ்டியர் குக் 64, அலெக்ஸ் ஹேல்ஸ் 50 ஓட்டங்களுடன் உள்ளனர். முன்னதாக பாகிஸ்தான் அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 400 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக அஸார் அலி 139, சமி அஸ்லாம் 82, அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக் 56, சர்ஃபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக இங்கிலாந்து அணி தமது முதலாவது இனிங்ஸில் 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக கரி பலன்ஸ் 70, மொயின் அலி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். பந்துவீச்சில் சொஹைல் கான் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.ய