இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த கோஹ்லி!

Monday, October 10th, 2016

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்களை பெற்றிருந்தது.அணித்தலைவர் விராட் கோஹ்லி 103 ஓட்டங்களுடனும், ரஹானே 79 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹானே சதம் அடித்தார்.அதேபோல் நிதானமாக ஆடி வந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி 2வது முறையாக இரட்டை சதம் விளாசினார்.

147 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் மட்டும் இழந்து 456 ஓட்டங்கள் எடுத்துள்ளது.விராட் கோஹ்லி 207 ஓட்டங்களுடனும், ரஹானே 161 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tamil_News_large_1624330

Related posts: