இரட்டையர் மேசைப்பந்தாட்டத்தில் யாழ் பிரதேச செயலகம் சம்பியன்!

Wednesday, March 28th, 2018

யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப்  பிரிவினாரால் நடத்தப்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான மேசைப் பந்தாட்டத்தில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி சம்பியனானது வை.எம்.ஏச்.ஏ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணியைப் பிரதிநிதித்துவம் செய்த சியாம்ராஜ், மேஸ்க் ஆகியோரை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியை பிரதிநிதித்துவம் செய்த துஷ்யந்தன் , ஹரிப்பிரகாஷ் ஆகியோர் மோதினர் அதில் முதலாவது செற்றில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியினர் 13:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர் ஆனால் அடுத்த இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய யாழ் பிரதேச செயலக அணி 11:7  , 11:9 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தனர்.

Related posts: