இம்ரான் தாஹிர் மீது இனவெறி விமர்சனம் : விசாரணைக்கு உத்தரவிட்டது தென் ஆப்ரிக்கா!

Wednesday, February 14th, 2018

ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் இம்ரான் தாஹிரை இனரீதியாக விமர்சித்தனர். எனவே அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வாண்டரர்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து கோபமடைந்த ரசிகர்கள் அவரை இனரீதியாக விமர்சித்துள்ளனர். அடுத்து உடனே மைதானத்தில் இருந்த காவலர்களிடம் இம்ரான் தாஹிர் புகார் அளித்துள்ளார்.

ஆயினும் போட்டி நிறைவடைந்த நேரம் என்பதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் முன் அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

பின்னர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இம்ரான் தாஹிரை இனரீதியாக விமர்சிக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வெளியானதால் இது குறித்து விசாரனையை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.

38 வயதாகும் இம்ரான் தாஹிர் 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர். இவர் தென் ஆப்ரிக்க அணி சார்பில் 20 டெஸ்ட் போட்டிகளும், 84 ஒரு நாள் போட்டிகளிலும், 36 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: