இம்முறையும் கனவு தகர்ந்தது!

Tuesday, May 31st, 2016

சர்வதேச ரெனிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியாக திகழ்ந்து வருகிறது.

பிரெஞ்ச் ஓபன் ரெனிஸ் போட்டி தொடர்` பாரிஸ் நகரில் நடந்து வருகிறது, இதில், சானியா மிர்சா -மார்டினா ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது ரெனிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில், தொடரின் முதல் நிலை இணையான இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ், செக் குடியரசின் கிரிஜெக்கோவா- கட்டரினா சினியக்கோவா இணையை எதிர்த்து விளையாடியது.

இந்தப்போட்டியில் 3-6, 2-6 என்ற நேர் செட்களில் சானியா ஜோடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் சானியா மிர்சா- மார்டினா ஹிங்கிஸ் இணை, பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வெல்லும் கனவு இந்த முறையும் தகர்ந்துள்ளது

Related posts: