இம்மாத இறுதிக்குள் றசலின் முடிவு வெளிவரும்!

Tuesday, November 22nd, 2016

ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முகவராண்மையின் சட்ட விதிகளை, மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசல் மீறினாரா என்பது தொடர்பான இறுதி முடிவு, 2 அல்லது 3 வாரங்களில், ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான சுயாதீனத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்படவுள்ளது.

ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான விதிகளின்படி, வீரரொருவர், தான் இருக்கும் இடங்களை அறிவிப்பது அவசியமானகும். ஆனால், கடந்தாண்டு ஜனவரி 1, ஜூலை 1, ஜூலை 25 ஆகிய நாட்களில் தனது இருப்பிடங்களை அறிவிக்காமல், ஊக்கமருந்துச் சோதனைகளை, றசல் தவறவிட்டுள்ளார். 3 சோதனைகளைத் தவறவிடுதல், சோதனையில் தோற்பதற்கு ஈடானது என்பதாலேயே, இது தொடர்பான இறுதி முடிவு, றசலின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையவுள்ளது.

45col150845231_5036138_21112016_aff_cmy

Related posts: