இமாலய ஓட்டங்கள் குவித்தும் தொடரை இழந்தது இலங்கை !

Thursday, June 30th, 2016
இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஜாசன் ராய் அதிரடியால் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் 50 ஓவரை கொண்ட இந்த போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களாக குஷால் பெரேரா, குணத்திலக களமிறங்கினர். குஷால்பெரேரா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குணத்திலக, குஷால் மெண்டிஸ் நிதானமாக ஆடினர்.

இதனால் இருவரும் அரைசதம் விளாசினர். குஷால் மெண்டிஸ் 77 ஓட்டங்களும், குணத்திலக 62 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஜோடி சேர்ந்த சந்திமாலும், அணித்தலைவர் மேத்யூஸூம் அபாரமாக ஆடினர். சந்திமால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். மேத்யூஸூம் தனது பங்கிற்கு அரைசதம் விளாசினார்.

சந்திமால் 63 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பிரசன்னா (9) நிலைக்கவில்லை. 42 ஓவர்கள் முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அணித்தலைவர் மேத்யூஸ் 67 ஓட்டங்களுடனும், தசன் ஷனக 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில், டேவிட் வில்லி, அடில் ரசிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரர்களாக ஜாசன் ராய், மொயீன் அலி களமிறங்கினர். மொயீன் அலி 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஜாசன் ராய், ஜோ ரூட் நிதானமாக ஆடினர். ஜோ ரூட் (65) சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ஜாசன் ராயும் அரைசதம் அடித்தார்.

அணித்தலைவர் இயன்மோர்கன் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜாசன் ராய் சதம் விளாசினார். அவர் 118 பந்தில்13 பவுண்டரி, 3 சிக்சர்கள் உட்பட 162 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் பிராஸ்டவ் 29 ஓட்டங்களும், பட்லர் 17 ஓட்டங்களும் எடுக்க இங்கிலாந்து 40.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 309 ஓட்டங்கள் பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓட்டங்களை வாரி வழங்கினர். நுவன் பிரதீப் 78 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: