இன்றைய போட்டியை வெற்றிகொள்ளும் திடம் இலங்கை வீரர்களிடம் உள்ளது – கிராம் போர்ட்!

Friday, September 9th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இன்று நடைபெறவுள்ள போட்டியை வெற்றிகொள்ளும் மனோதிடம் இலங்கை அணி வீரர்களிடம் உள்ளதென பயிற்றுநரான கிராம் போர்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான சர்வதேச இருபதுக்கு20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அனுபவம் குன்றிய அணியாகக் காணப்படும் இலங்கை அணி குறித்த போட்டியில் பலதரப்பட்ட ஆற்றல்களையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே வெற்றிபெற முடியும் என கிராம் போர்ட் சுட்டிக்காட்டினார்.

தொடரை சமநிலையுடன் முடித்துக்கொண்டால் அதுவும் பாரியதொரு வெற்றியாக அமையும் என குறிப்பிட்ட அவர், அதற்கேற்ற மனோதிடத்துடன் இலங்கை அணி உள்ளதாகவும் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 எனும் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 4-1 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா தன்வசப்படுத்தியது. இரு அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் 85 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.

SL

Related posts: