இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதுகின்றது இலங்கை!

Sunday, March 20th, 2016

20 ஓவர் உலக்கிண்ண போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் (குரூப் 1) அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டாரன்சேமி தலைமையிலான மேற்கிந்திய அணி – மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் ஆரம்ப ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்ததால் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

இலங்கை அணி ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அணித்தலைவர் மேத்யூஸ், டில்ஷான், சன்டிமால், பெரேரா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மலிங்கா விலகியது. அந்த அணிக்கு பாதிப்பே.

இரு அணிகளும் 8 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் மேற்கிந்திய 2 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Related posts: