இன்று களமிறங்குகிறது இலங்கை அணி!

Thursday, October 26th, 2017

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 போட்டி இன்று அபுதாபியில் நடைபெறுகிறது.திஸர பெரேராவின் தலைமையில் அனுபவம் குறைந்த வீரர்களைக் கொண்ட இலங்கை அணி இன்று களமிறங்குகிறது.

இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில், ஒருநாள் போட்டித் தொடரின் கடைசி போட்டியில் 21 பந்துகளில் 5 விக்கட்டுகளை வீழ்த்திய உஸ்மான் கான் இந்த தொடரிலும் இணைக்கப்பட்டுள்ளார்.அவர் இறுதி அணியில் இணையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

துடுப்பாட்டத்தில் இமாம் உல் ஹக் மற்றும் அஹமட் செஹ்சாட் ஆகியோருக்கு இடையில் வாய்ப்புக்கான போட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.போட்டி நடைபெறவுள்ள அபுதாபி மைதானம் கடந்த போட்டிகளில் பெருமளவில் துடுப்பாட்டத்துக்கு வாய்ப்பளித்திருக்கவில்லை.

எனவே முதலாவது 20க்கு20 போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.இதேவேளை, இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் மொத்தமாக விளையாடியுள்ள 20க்கு20 போட்டிகளைக் காட்டிலும் அதிகமான 20க்கு20 போட்டிகளில் அணித் தலைவர் திஸர பெரேரா விளையாடி இருக்கிறார்.

குழாமில் உள்ளடக்கப்பட்டுள்ள 11 வீரர்கள் தங்களின் முதலாவது சர்வதேச 20க்கு20 போட்டியில் விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: