இன்று இலங்கை இந்திய அணிகள் மோதும் 20 ஓவர்  போட்டி!

Saturday, December 23rd, 2017

இன்று இரவு 7 மணியளவில் இலங்கை இந்திய அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் துடுப்பாட்ட போட்டி இந்தூரில் ஆரம்பமாகவுள்ளதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 3 தொடர்கள் கொண்ட  தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. முதலாவது போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி வீரர்கள் இதில் வெற்றிபெறவேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணியில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், ஜெய்தேவ்உனட்கட் அல்லது முகமது சிராஜ் அல்லது பாசில் தம்பி, ஜஸ்பிரித் பும்ர, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அணியில் குணதிலகா, தரங்கா, சமரவிக்ரமா அல்லது குசல் பெரேரா, மேத்யூஸ்இடிக்வெல்லா, குணரத்னே, திசரா பெரேரா, பதிரானா, அகிலாதனஞ்ஜெயா, சமீரா இநுவான் பிரதீப் ஆகியோர் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: