இன்று இலங்கை–ஆப்கான் மோதல்!

Thursday, March 17th, 2016
இலங்கை– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
சிறிய அணியான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
கால் முட்டி காயத்தால் அவதிப்படும் இலங்கை பிரதான வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை முடிந்தவரை அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க போராடும்.
இலங்கை அணி கடைசியாக விளையாடிய பத்து 20 ஓவர் போட்டிகளில் 2–ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி பத்து 20 ஓவர் போட்டில் 9–ல் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.ய

Related posts: