இன்று இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்!
Friday, July 22nd, 2016இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, லோர்ட்ஸில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று வெள்ளிக்கிழமை (22) இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகிறது.
முதலாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ள உற்சாகத்துடன் இப்போட்டியில் களமிறங்குவதோடு, ஸ்பொட் பிக்சிங்கில் ஈடுபட்டு தடையை எதிர்கொண்ட அதே மைதானத்திலேயே தனது மீள் வருகையை மேற்கொண்ட இளம் வேகப்பந்துவீச்சாளரான மொஹம்மட் ஆமிர், இப்போட்டியில் எந்தவித அழுத்தமும் இல்லாது பங்கேற்பது பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் பலம். எவ்வாறெனினும், தனது ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களிடமிருந்து மேலதிக ஓட்டங்களை எதிர்பார்ப்பதோடு, மத்திய வரிசையிடமிருந்தும் மேலதிக உறுதியான ஆட்டத்தை எதிர்பார்க்கின்றது.
மறுபக்கத்தில், ஜேம்ஸ் அன்டர்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் காயத்திலிருந்து குணமடைந்து குழாமுக்குள் திரும்பிய நிலையில் பலமாகக் காட்சியளிக்கும் இங்கிலாந்து, அண்மைய காலங்களில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தாத மொயின் அலிக்கு பதிலாக அடில் ரஷீட் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து அணி: அலிஸ்டியர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜேம்ஸ் வின்ஸ், கரி பலன்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீட், ஸ்டூவர்ட் ப்ரோட், ஜேம்ஸ் அன்டர்சன்
எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: மொஹம்மட் ஹஃபீஸ், ஷன் மசூட், அஸார் அலி, யுனிஸ் கான், மிஸ்பா உல் ஹக், அசாட் ஷஃபிக், சஃப்ராஸ் அகமட், மொஹம்மட் ஆமிர், வஹாப் ரியாஸ், யசீர் ஷா, ரஹாட் அலி
Related posts:
|
|