இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்துள்ள பங்களாதேஷ்!

Monday, December 3rd, 2018

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற அடிப்படையில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஒரு இன்னிங்ஸாலும், 184 ஓட்டங்களினாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.

இதனூடாக டெஸ்ட் கிரிக்கட்டில் தமது முதலாவது இன்னிங்ஸ் வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது.

போட்டியில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 508 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 111 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து.

பின்னர் ஃபொலோவன் முறையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 213 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் மெஹிடி ஹஸன் மிராஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிகூடுதலாக 12 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 64 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: