இனி பங்கேற்க மாட்டேன்: WWE முன்னணி ஜாம்பவான் !

Friday, December 8th, 2017

உடல்நல பிரச்சனை காரணமாக இனி WWE மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என பிரபல வீரர் ராப் வேன் டேம் அறிவித்துள்ளார்.உலகெங்கிலும் WWE மல்யுத்த விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த விளையாட்டின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ராப் வேன் டேம் (46) பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றியுள்ள ராப், சில காலமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்

இந்நிலையில் ராப்புக்கும் அவர் மனைவி சோனியாவுக்கும் சமீபத்தில் விவாகரத்து ஆனது விவாகரத்தை தொடர்ந்து சோனியாவுக்கு சட்டபடி ராப் பணம் தரவேண்டியுள்ள நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்

ராப் கூறுகையில், கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் எனக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது. இதோடு உடலில் காயங்களும் நிறைய உள்ளன இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி WWE போட்டிகளில் இனி பங்கேற்க மாட்டேன்.

WWE நிறுவனத்துடன் நான் போட்ட ஒப்பந்தம் கடந்த யூலையில் முடிந்துவிட்டது. எனக்கு முன்பு போல அதிக வருமானம் வருவதில்லை.அதனால் என் நிலையை புரிந்து கொண்டு சோனியாவுக்கு குறைந்த அளவு பணத்தை மட்டும் நான் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: